அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவுதிஅரேபியாவுக்கு நன்றி - சீமான்


அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவுதிஅரேபியாவுக்கு நன்றி - சீமான்
x

அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவுதிஅரேபியாவுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகரில் அமைந்துள்ள காஃபாவில் நடைபெறும் அரஃபா நாள் சொற்பொழிவுகள் இனி நமது தாய்மொழியான தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒளிப்பரப்பப்படும் என்ற அந்நாட்டு அரசின் அறிவிப்பு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

பலகோடி தமிழர்கள் வாழும் இந்திய நாட்டின் பாராளுமன்ற அவைகளிலும், நீதிமன்றங்களிலும் தாய்த்தமிழில் வாதிடும் உரிமைக்காக இன்றுவரை தமிழர்கள் இடைவிடாது போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இஸ்லாத்தை ஏற்ற தமிழர்கள் இறை வழிபாட்டினை தங்கள் தாய்மொழியிலேயே கேட்டு வழிபட உதவிடும் வகையில் தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கும் சவுதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story