பழங்குடி இனத்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு 3 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது


பழங்குடி இனத்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு 3 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது
x

வீட்டுமனை பட்டா கேட்டு 3 நாட்கள் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

திருவள்ளூர்

வீட்டுமனை பட்டா

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடையாது. கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வீட்டுமனை பட்டா உடனே வழங்க கோரி கடந்த 21-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்ததனர்.

3 நாட்களாக

நேற்றுடன் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. எனவே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் ஜீவா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மைக்கேல்தாஸ், தென் சென்னை மாவட்ட தலைவர் சமரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சூர்யா மற்றும் போராட்டக்காரர்களை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சப்-கலெக்டர் மகாபாரதி, கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ டி.ஜே கோவிந்தராஜன், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உறுதி

கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். அதன் பின்னர் கண்டிப்பாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று 3-நாட்கள் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story