தலைமறைவாக இருந்த டிரைவர் கைது


தலைமறைவாக இருந்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2022 1:00 AM IST (Updated: 30 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் மோதி பெண் பலியானது தொடர்பாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:-

சேந்தமங்கலம் அருகே தேர் புளியமரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் மனைவி ஈஸ்வரி (வயது 22), இவர், நாச்சியார்புதூர் வழியாக காளப்பநாயக்கன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த டிராக்டர் ஈஸ்வரி மீது மோதியது. இதில் ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை தேடி வந்தனர். இதற்கிடையே நடுக்கோம்பையை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பழனிசாமி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story