புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு


புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு
x

புத்தக திருவிழா இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை)நிறைவடைகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் 5-வது புத்தக திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரங்குகளை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்தப்படி உள்ளனர். இந்த நிலையில் விழாவின் 9-ம் நாளான நேற்று இல்லம் தேடி கல்வி மைய திட்டத்தின் மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் மாநில திட்டக்குழு உறுப்பினரும், கலைமாமணியுமான நர்த்தகி நடராஜின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இவரது பரதநாட்டியத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் கலெக்டர் கவிதாராமு, திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, முத்துநிலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் புத்தக திருவிழா இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார்.

1 More update

Next Story