கன்னியாகுமரியில் கொட்டும் மழையில் விவேகானந்தர் பாறை அருகே தியானம் - பரவசத்தில் ஆழ்த்திய சிறுவன்


கன்னியாகுமரியில் கொட்டும் மழையில் விவேகானந்தர் பாறை அருகே தியானம் - பரவசத்தில் ஆழ்த்திய சிறுவன்
x

கன்னியாகுமரி கடற்கரையில் மதில் சுவர் மீது ஏறி நின்று நடனம் ஆடியபடி சிறுவன் தியானம் இருந்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

ஆனால் இந்த கொட்டுகிற மழையிலும் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரையில் உள்ள மதில் சுவரில் ஏறி நின்று யோகாசனம் செய்தார்.

அப்போது அந்த சிறுவன் கொட்டுகிற மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார். அதன் பிறகு மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார்.

இந்த காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் பலர் அந்த சிறுவனின் சாகச காட்சிகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டே இருந்தனர். அந்த சிறுவனும் மழை நிற்கின்ற வரை அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது யோகாசன சாகசங்களை செய்து கொண்டே இருந்தார்.


Next Story