விருத்தாசலத்தில்திருமணமான 3 மாதத்தில் நகை-பணத்துடன் புதுப்பெண் ஓட்டம்கடிதம் சிக்கியதால் பரபரப்பு


விருத்தாசலத்தில்திருமணமான 3 மாதத்தில் நகை-பணத்துடன் புதுப்பெண் ஓட்டம்கடிதம் சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

விருத்தாசலத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்தார்.

கடலூர்


விருத்தாசலம்,

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திடீரென மாயமான பெண்

விருத்தாசலத்தில் ஆலடி சாலையில் வசிப்பவர் ராசப்பன் மகன் நடேசன் (வயது 39). இவர் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாமக்கல் மாவட்டம் பழையபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 7.12.2022 அன்று திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவை திடீரென காணவில்லை. இதனால் பதறிய நடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் ஐஸ்வர்யா பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நடேசன், விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், வீட்டில் இருந்த தனது மனைவியை காணவில்லை எனவும், அவரை கண்டு பிடித்து தருமாறும் கூறியிருந்தார்.

கடிதம் சிக்கியது

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடேசன் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது, அங்கு கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், நடேசனுடன் வாழ தனக்கு விருப்பமில்லை என கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஐஸ்வர்யா கடிதம் எழுதி வைத்து விட்டு ஒரு பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்துடன் வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story