பண மோசடி: மும்பை போலீசார் தேடிவந்த தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது


பண மோசடி: மும்பை போலீசார் தேடிவந்த தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
x

மும்பை போலீசார் தேடி வந்த பிரபல தொழிலதிபரை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை

ஆலந்தூர்:

மும்பையை சோ்ந்த தொழில் அதிபர் நிக்மத் அலி (வயது 58). இவா் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பண மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. இதை அடுத்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்து, நிக்மத் அலியை தேடி வந்தனா். இதை அடுத்து கடந்த ஜூன் மாதம் மும்பை மாநகர போலீஸ் கமிஷ்னர்,தொழில் அதிபா் நிக்மத் அலியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை சார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது நக்மத் அலியின் பாஸ்போர்ட் ஆவணங்களை சோதனை செய்யும் பொழுது அவர் மும்பை போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று தெரியவந்தது. இத எடுத்து அவரை வெளியே விடாமல் தனி அறையில் வைத்தனர்.

அதோடு மும்பை மாநகர போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.மும்பையிலிருந்து தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.


Next Story