டீ கடைக்குள் கார் பாய்ந்தது; மூதாட்டி சாவு


டீ கடைக்குள் கார் பாய்ந்தது; மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:15:32+05:30)

கீழக்கரையில் டீ கடைக்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ள வீட்டு விசேஷத்திற்கு சேலத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அப்போது மறுநாள் காலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கீழக்கரை பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளுக்கு காரில் சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி சென்றார். அப்போது அந்த காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் (38) என்பவர் யாருக்கும் தெரியாமல் காரை ஓட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரில் உள்ள டீக்கடையை உடைத்துக் கொண்டு கார் உள்ளே நுழைந்தது.அப்போது அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த வேளானூரைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி (83) என்பவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிய யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி உடலை போலீசார் கைப்பற்றி கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டீ கடைக்குள் நுழைந்த காரை பொக்லைன் எந்திரம் மூலம் கீழக்கரை போலீசார் அகற்றினர்.


Related Tags :
Next Story