வேலூர் கோர்ட்டு அருகே கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வேலூர் கோர்ட்டு அருகே திடீரென கார் தீ பிடித்து எரிந்த நிலையில் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வேலூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஒரு வழக்கு தொடர்பாக தனது வக்கீலை சந்திக்க நேற்று வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் நீதிமன்றத்துக்கு சென்றார். அப்போது தனது காரை அருகில் உள்ள சாலையில் நிறுத்தி இருந்தார்.
பின்னர் மீண்டும் திரும்ப வந்து வாகனத்தை எடுக்க முயன்ற போது திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்தது. மளமளவென தீப்பிடித்து கார் முழுவதும் பரவியது. காருக்கு உள்ளே மாட்டிக்கொண்ட சதீஷை பொது மக்கள் மீட்டனர்.
இதில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத் தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story