சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது


சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது
x

மரப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்

விழுப்புரம்,

திருச்சியில் இருந்து சென்னைக்கு மரப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த சாய்நரசிம்மலு (வயது 35) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த சரக்கு வாகனம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி திடீரென சாலையோரமாக இருந்த 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்து அதன் இடிபாடுகளுக்குள் சாய்நரசிம்மலு சிக்கிக்கொண்டு பலத்த காயமடைந்ததோடு வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சாய்நரசிம்மலுவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த சரக்கு வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story