தூத்துக்குடிக்கு மத்தியக்குழு இன்று மீண்டும் வருகை


தூத்துக்குடிக்கு மத்தியக்குழு இன்று மீண்டும் வருகை
x
தினத்தந்தி 12 Jan 2024 2:50 AM GMT (Updated: 12 Jan 2024 3:04 AM GMT)

தூத்துக்குடி முழுவதும் 24 இடங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்கின்றது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் பல்வேறு குளங்களும் உடைந்ததால் பெரும்பாலான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள் என்று பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மழை வெள்ளம் சூறையாடி சென்று விட்டது.

இதனால் மத்தியக்குழுவினர் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வு செய்தபோது மழை வெள்ளம் முழுவதுமாக வடியாததால் பல இடங்களில் சேத மதிப்பை முழுமையாக கணக்கிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் முழுமையான சேத மதிப்பை ஆராய்வதற்காக கே.பி.சிங் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகின்றனர். அவர்கள் காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து 2 குழுக்களாக பிரிந்து சென்று மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் ஆய்வு செய்கின்றனர்.


Next Story