தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டதுசேலத்தில் செ.கு.தமிழரசன் பேட்டி
சேலம்
இந்திய குடியரசு கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்குனேரியில் தாக்குதலுக்குள்ளான அண்ணன், தங்கையின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி அவர்களின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் தற்போது தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. இதை கண்டிக்கிறோம். நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத்தேர்வும் தமிழகத்திற்கு தேவை இல்லை. எடப்பாடி பழனிசாமி, தனது வலிமையை காட்டுவதற்காகவே மாநாடு நடத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மாங்காபிள்ளை, துணைத்தலைவர்கள் செபாஸ்டின், பாலகிருஷ்ணன், பொறுப்பாளர் வணங்காமுடி, தொழிற்சங்க செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.