சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு; முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு


சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு; முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
x

திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

சங்கிலி பறிப்பு

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 58). கீழ்ச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல பள்ளி முடிந்து, தன்னுடன் பணிபுரியும் ஆசிரியையுடன் சேர்ந்து வீட்டுக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

பண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்களில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஆரோக்கியமேரி கழுத்தில் இருந்த சங்கிலியை பிடித்து இழுத்தார்.

வலைவீச்சு

இதனால் பதறிப்போன அவர் சங்கிலியை இறுக்கமாக பிடித்து உள்ளார். இதில் சங்கிலியின் ஒரு பகுதி 3 பவுன் கொள்ளையர்கள் கையில் சிக்கியது. அந்த 3 பவுன் நகையுடன் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இது குறித்து ஆசிரியை ஆரோக்கியமேரி மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சாலையோரம் நடந்து சென்ற ஆசிரியையிடம் சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story