இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர்


இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர்
x

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக நிர்வாகியின் மனைவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் ஆறுதல் கூறினார்.

சென்னை,

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக பிரமுகரின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாளையூரை சேர்ந்த 85 வயதான முதியவர் தங்கவேல் என்பவர், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தங்கவேலின் இறுதி சடங்கிற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று இரவு தாளையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கவேலின் உருவப்படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தலைமை கழகம் சார்பில் ரூ.5 லட்சமும், மாவட்ட கழகம் சார்பில் ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தங்க வேலின் மனைவி ஜானகியிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு ஜானகியிடம் ஆறுதல் தெரிவித்தார்.


Next Story