மறைந்த முனைவர் எம்.அனந்தகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தை முதல்-அமைச்சர் வெளியிட்டார்


மறைந்த முனைவர் எம்.அனந்தகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தை முதல்-அமைச்சர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 11 July 2022 2:58 PM IST (Updated: 11 July 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த முனைவர் எம்.அனந்தகிருஷ்ணன் மற்றும் டி.நெடுஞ்செழியன் ஆகியோர் எழுதிய புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை:

மறைந்த முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் மற்றும் கல்வியாளர் டி.நெடுஞ்செழியன் ஆகியோர் இணைந்து எழுதிய 'இந்தியக் கல்வி முறை - பிரம் கிரேட்டர் ஆர்டர் டூ கிரேட்டர் டிசார்டர்' என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தனது 92-வது வயதில் காலமானார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை அளிக்கும் உன்னத உட்கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பியவர் ஆனந்தகிருஷ்ணன்.

கல்வியாளர் டி.நெடுஞ்செழியன், இந்தியா காலேஜ் ஃபைண்டர்' என்ற சமூகத் தொழில் முனைவோர் கல்வி அமைப்பை நடத்தி வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு கல்விக் குழுக்களில் நிபுணர்களுடன் பணியாற்றிய பரந்த அனுபவம் அவருக்கு உண்டு.

இந்நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மறைந்த கல்வியாளரின் உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story