"தேசத்திற்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பிற்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - கவர்னர் ஆர்.என்.ரவி


தேசத்திற்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பிற்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி
x

லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில், இந்தியாவின் 2-வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார்.

இந்த சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஆர்.என்.ரவி, நமது தேசத்திற்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பிற்கு இன்னும் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் நமது தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்த தேசிய கண்ணோட்டத்தில் ஒரு முரண்பாடான மாற்றத்தை லால் பகதூர் சாஸ்திரி கொண்டு வந்தார் என அவர் குறிப்பிட்டார்.


Next Story