பாஜக பிரமுகரின் மனைவி, மகள் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட குறும்பட இயக்குனர் கைது


பாஜக பிரமுகரின் மனைவி, மகள் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட குறும்பட இயக்குனர் கைது
x

பாஜக பிரமுகரின் மனைவி, மகள் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட குறும்பட இயக்குனரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

பாஜக பிரமுகரின் மனைவி மற்றும் மகள் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு கொலை மிரட்டல் விடுத்த குறும்பட இயக்குனர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் அய்யங்கோட்டையை சேர்ந்த பாஜக பிரமுகரும், வக்கீலுமான சிவராம், அதேபகுதியை சேர்ந்த குறும்பட இயக்குநரான ராஜேஸ்குமாரின் எதிர்தரப்புக்கு ஆதரவாக கோர்ட்டில் வழக்காடி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜேஸ்குமார், சிவராமுக்கு சமூகவலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிவராமின் மனைவி, மகள், புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்தும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சிவராம் புகார் அளிக்கவே, சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜேஸ்குமாரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story