திருவள்ளூரில் 75 ஆவது சுதந்திர தின விழா; மாவட்ட கலெக்டர் கொடி ஏற்றினார்


திருவள்ளூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பை ஏற்று 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த 75-வது சுதந்திர தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொட்டார்

அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழ் வழங்கினர். மேலும் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். அதைத்தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் , மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப் கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவர்ஷன் வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ராஜலஷ்மி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதேபோல் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார், திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


Next Story