செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
கடலூரில் செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்
நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பத்தை சேர்ந்தவர் கலைமணி (வயது 44), அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விழுப்புரத்திற்கு புறப்பட்டார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில் கலைமணி, செல்போனில் பேசிக் கொண்டும், செல்போனை பார்த்தபடியும் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் சிலர், கலைமணி செல்போனில் பேசியபடி பஸ்சை இயக்கியதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பினர்.
அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கலைமணி செல்போனில் பேசியபடி பஸ்சை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் பொது மேலாளர் அர்ஜூணன், கலைமணியை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story