சென்னையில் நடைபெற இருந்த தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு


சென்னையில் நடைபெற இருந்த தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்  தள்ளிவைப்பு
x

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற இருந்தது.

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று அமைந்த மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொளி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாளை சென்னையில் தேர்தல் ஆணையர்களுடன் , இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற இருந்தது.

இந்த நிலையில் நாளை சென்னையில் நடைபெற இருந்த தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.


Next Story