டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
x

பேரம்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார்.

திருவள்ளூர்

பேரம்பாக்கம்,

பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 51). இவர் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் வயர் மேன்னாக பணிபுரிந்து வருந்தார். இவருக்கு திருமணமாகி சாவித்திரி (38) என்கின்ற மனைவியும், கலையரசன் (21), தர்ஷினி (17) என்கின்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி, மேட்டு கண்டிகை திடீர் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது.

இது குறித்து அங்கிருந்தவர்கள் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய அருள்ஜோதி நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு சென்றார்.

அப்போது அவர் டிரான்ஸ்பார்மர் மீது ஏரி பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் டிரான்ஸ்மார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள்ஜோதி உயிருக்கு போராடினார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துபோனார் என தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின்சாரம் தாக்கி வயர் மேன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story