தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ் , பெருமை பரவி உள்ளது - பல்லடத்தில் அண்ணாமலை பேச்சு
பல்லடம் மாதப்பூரில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் ,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதையடுத்து பல்லடம் மாதப்பூரில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ,
தமிழகத்தில் ஒரு அரசியல் சரித்திரத்தில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.இத்தனை ஆண்டுகளாக எதற்காக காந்திருந்தோமோ அந்த சரித்திரம் நம் கண் முன் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 39 தொகுதியிலும் பா.ஜ.க. வெல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிளிலும் வென்று மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார்.தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ் , பெருமை பரவி உள்ளது.பல்லடம் பொதுக்கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் . என தெரிவித்தார்.