இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறையில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு மீனா முன்னிலையில் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ்துறையில் கணினி விபர பதிவு ஊழியராக பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த பாலமுருகன் கடந்த 17.12.2022 அன்று உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு போலீஸ்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் குடும்பநிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ஏற்கனவே ரூ.50 ஆயிரம் முதல் தவணையாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போலீஸ்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா முன்னிலையில் பாலமுருகன் மனைவியிடம் 2-வது தவணையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story