கதண்டு கடித்து விவசாயி சாவு
கதண்டு கடித்து விவசாயி உயிரிழந்தார்.
திருச்சி
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள அலகரை கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருஈங்கோய்மலை அடிவாரத்தில் உள்ள ஒரு வாழை தோட்டத்தில் வாழை இலைகளை அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை கதண்டுகள் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்ணனின் மனைவி இந்திரா கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story