தீயில் தவறி விழுந்து விவசாயி சாவு


தீயில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 9 Oct 2023 12:30 AM IST (Updated: 9 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே தீயில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கையா (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் கிடந்த தேவையில்லாத பொருட்களை சேகரித்து தீயீட்டு எரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எழுந்த தீ, அருகில் உள்ள தோட்டத்திற்கும் பரவியதாக தெரிகிறது. இதனை தடுப்பதற்காக கையில் தென்னை மட்டையுடன் வேகமாகச் சென்ற போது, அருகில் இருந்த புதர் தடுக்கி தீயில் விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story