காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்


காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்
x

காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார்.

சென்னை

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர் சரண்குமார் (வயது 28). மீனவரான இவர், மோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் டிரைவர் குரு உள்பட 10 பேருடன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றார்.

ஸ்ரீஹரிகோட்டா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரண்குமார் விசைப்படகின் பின்புறம் தூங்கச் செல்வதாக டிரைவரிடம் கூறிவிட்டுச் சென்றார். நேற்று காலை டிரைவர் சரண்குமாரை தேடினார். ஆனால் அவரை காணவில்லை.

பின்னர் வயர்லெஸ் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ள விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவித்து தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சரண்குமாரின் தாய் நீலவேணி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலுக்குள் மாயமான மீனவரை தேடி வருகின்றனர்.


Next Story