சிறுமிக்கு பாலியல் தொல்லை


சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 7:40 AM GMT)

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது24). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகளை கூறி வீட்டில் இருந்து கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி (பொறுப்பு) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story