சிறுமி தற்கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: திருமாவளவன் எம்.பி. பேட்டி


சிறுமி தற்கொலை வழக்கை விரைந்து முடித்து   குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: திருமாவளவன் எம்.பி. பேட்டி
x

சிறுமி தற்கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என திருமாவளவன் எம்.பி. பேட்டி அளித்தார்.

பெரம்பலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுதாக்கல் செய்தது எதிர்ப்பார்த்தது தான். அந்த 6 பேர் சார்பிலும் வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டப்படி எதிர்கொள்ளப்படும். 6 பேர் விடுதலை ரத்து செய்யப்படாது என நம்புகிறோம். தமிழக அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசலாம். தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. திருமாந்துறை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளின் ஊழியர்களின் போராட்டம் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மத்திய இணை மந்திரியிடம் மனு கொடுத்திருக்கிறோம். கூட்டத்தொடரின்போது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், வழக்கில் இருந்து வெளியே வர முடியாத படி வழக்கை விரைந்து நடத்தி தண்டனை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும், என்றார்.


Next Story