அரசு வேலை வாங்கி தருவதாக 5 பேரிடம் ரூ.34¼ லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக  5 பேரிடம் ரூ.34¼ லட்சம் மோசடி
x

அரசு வேலைவாங்கி தருவதாக 5 பேரிடம் ரூ. 34 லட்சத்து 30 ஆயிரத்தை மோசடி செய்ததாக பெண் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

அரசு வேலைவாங்கி தருவதாக 5 பேரிடம் ரூ. 34 லட்சத்து 30 ஆயிரத்தை மோசடி செய்ததாக பெண் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

அரசு வேலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவரிடம் ராஜபாளையம் கீழவரகுணராமபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய அற்புதமேரி என்பவர் தனக்கு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றுபவர்களை தெரியும் என்றும் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய மணிகண்டன், ஆரோக்கிய அற்புதமேரியிடம் 2 தவணைகளாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ.8 லட்சத்தை கொடுத்துள்ளார்.

நீண்டநாள் ஆகியும் வேலை வாங்கி தராமல் இருந்த ஆரோக்கிய அற்புத மேரி கடந்த 2021-ம் ஆண்டு மணிகண்டனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மருந்தாளுனர் வேலை வாங்கி கொடுத்துள்ளார். 6 மாதத்தில் மணிகண்டன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் 4 பேர்

இதேபோன்று ஆரோக்கிய அற்புதமேரி, அரசு வேலை வாங்கித்தருவதாக மற்றொரு மணிகண்டனிடம் ரூ.13 லட்சமும், முத்துக்கிருஷ்ணன் என்பவரிடம் ரூ.4 லட்சமும், உதயகுமார் என்பவரிடம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரமும், வீரமணிகண்டன் என்பவரிடம் ரூ.4 லட்சமும் பெற்றுள்ளார்.

ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. அவர்களும் பலமுறை கேட்டும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, 5 பேரும் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்ததாக ஆரோக்கிய அற்புதமேரி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story