ஒரு வாரம் சுற்றுப்பயணம் முடிந்து ஊட்டியில் இருந்து கவர்னர் சென்னை திரும்பினார்


ஒரு வாரம் சுற்றுப்பயணம் முடிந்து ஊட்டியில் இருந்து கவர்னர் சென்னை திரும்பினார்
x
தினத்தந்தி 10 Jun 2023 6:00 AM IST (Updated: 10 Jun 2023 6:01 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வார சுற்றுப்பயணம் முடிந்து ஊட்டியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்.

நீலகிரி

ஊட்டி

ஒரு வார சுற்றுப்பயணம் முடிந்து ஊட்டியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்.

கவர்னர் வருகை

ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க கடந்த 3-ந் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து ஊட்டி வந்தார். இதைத்தொடர்ந்து துணை வேந்தர்கள் மாநாட்டை அவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது வெளிநாடு முதலீடுகள் குறித்து அவர் பேசிய கருத்து அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் தனது மனைவி லட்சுமி மற்றும் குடும்ப நண்பர்களுடன் அவலாஞ்சி அணையை சுற்றி பார்த்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ஒரு வார கால சுற்றுப்பயணம் முடிந்து கவர்னர் ஊட்டியில் இருந்து கிளம்பினார்.

சென்னை திரும்பினார்

இதையொட்டி முன்னதாக காலை 8 மணி முதல் தாவரவியல் பூங்கா பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. 9 மணிக்கு கார் மூலம் ராஜ்பவனில் இருந்து கிளம்பி கோத்தகிரி சாலை வழியாக மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொழில் அதிபர் ஒருவரை சந்தித்த பின்னர் கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார் அங்கு மதிய உணவு முடித்த பின்னர் விமான நிலையம் சென்றார். இதன் பின்னர் மதியம் 3 மணிக்கு விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக கவர்னர் பயணத்தையொட்டி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story