தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்
ராயவரத்தில் தீவிபத்தில் ஓட்டல் எரிந்து நாசமானது/
புதுக்கோட்டை
ஓட்டலில் தீ
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ராயவரம் கிராமத்தில் குடிசையில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று காலை வழக்கும் போல் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது தோசை கல் அருகே புகை வெளியேறுவதற்காக புகை கூண்டு வைத்துள்ளனர்.
அந்த புகை கூண்டின் வழியாக தீ வெளியேறி கீத்து கொட்டகையில் பட்டு தீ பரவியது. கீத்து கொட்டகையில் மேல் சிறிதாக தீ பட்டபோது அதை யாரும் கவனிக்கவில்லை.
எரிந்து நாசம்
சிறிது நேரத்தில் தீ மள மளவென கீத்து கொட்டகை முழுவதும் பிடித்து எரிந்தது. இதில் ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலி, உணவு சமைக்க கூடிய பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story