பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம்: பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் கைது


பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம்: பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் கைது
x

மத்திய அரசின் வேண்டுகோளின் படி மக்கள் வீடுகள், தொழிற்கூடங்கள், அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றினர்.

திருப்பூர்,

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கடந்த 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளின் படி வீடுகள், தொழிற்கூடங்கள், அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பல்வேறு தரப்பினர்களும் உணர்வுப் பூர்வமாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும் தியாகிகளின் தியாக உணர்வை நினைவு கூர்ந்தனர்.

இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் கடந்த 13-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கட்சி சார்ந்த கொடி கம்பங்களில் நாட்டின் தேசிய கொடியை ஏற்றக்கூடாது என அரசு விதி இருந்த நிலையில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் காங்கேயத்தில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏற்றியதால் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி அவமதித்த விவகாரம் தொடர்பாக காங்கேயம் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரகுபதி என்பவரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story