கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி மாற்றம்


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி மாற்றம்
x
தினத்தந்தி 29 April 2023 6:36 AM GMT (Updated: 29 April 2023 8:38 AM GMT)

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி,

கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முக்கிய ஆசாமியான சேலம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகாலமாக நடைபெற்றுவருகிறது.

மேலும், இந்த வழக்கை கடந்த ஒரு ஆண்டாக நீதிபதி முருகன் என்பவர் விசாரித்து வந்தார். இந்த வழக்கு சிபிடிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story