பாலத்தின் சுவரில் அமர்ந்திருந்த 5 பேரின் கால்கள் முறிந்தன


பாலத்தின் சுவரில்  அமர்ந்திருந்த 5 பேரின் கால்கள் முறிந்தன
x

ஆர்.எஸ்.மங்கலம் அருகே வேன் மோதியதால் பாலத்தின் சுவரில் அமர்ந்திருந்த 5 பேரின் கால்கள் முறிந்தன.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அழகர்தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 42), இதே ஊரைச் சேர்ந்த கணேஷ் பிரபு (40), கண்ணன் (40) பதினெட்டான் (49) நெடும்புலிகோட்டை கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (40) ஆகிய 5 பேரும் சம்பவத்தன்று இரவு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கணேஷ் மகால் எதிரே பாலத்தின் தடுப்பு சுவரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. இதில் பாலத்தில் உட்கார்ந்திருந்த 5 பேரின் கால்களும் முறிந்தன. படுகாயம் அடைந்த 5 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் கரூர் என்.புதூர் மன்மங்கலத்தை சேர்ந்த குருசாமி(36) கைது செய்யப்பட்டார்.


Related Tags :
Next Story