குடும்பத்துடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய வாலிபர் மாயம்


குடும்பத்துடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய வாலிபர் மாயம்
x

தாழங்குப்பம் அருகே குடும்பத்துடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

எண்ணூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் முகம்மது ஆசிப்(வயது 22). வீடுகளுக்கு பால்சீலிங் போடும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தாருடன் தாழங்குப்பம் அருகே கடலில் குளித்து விளையாடிகொண்டிருந்தார். அப்போது திடீரென கடலில் தோன்றிய ராட்சத அலை முகம்மது ஆசிப்பை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே அருகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தேடினர். ஆனாலும் முகம்மது ஆசிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ராட்சத அலையில் சிக்கி மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story