மளிகை கடையில் எரிந்த தீயை அணைக்க வந்தபோது தீயணைப்பு வாகனத்தில் இருந்த 'வாக்கி-டாக்கி' மாயம்


மளிகை கடையில் எரிந்த தீயை அணைக்க வந்தபோது தீயணைப்பு வாகனத்தில் இருந்த வாக்கி-டாக்கி மாயம்
x

சென்னை போரூர் அருகே மளிகை கடையில் எரிந்த தீயை அணைக்க வந்தபோது தீயணைப்பு வாகனத்தில் இருந்த ‘வாக்கி-டாக்கி’ மாயமானது.

சென்னை

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மளிகை கடையில் எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தாங்கள் வந்த தீயணைப்பு வாகனத்துடன் புறப்பட்டு செல்ல முயன்றனர். அப்போது தீயணைப்பு வாகனத்தில் வைத்திருந்த 'வாக்கி - டாக்கி' மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் தீயணைப்பு நிலைய அதிகாரி அளித்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'வாக்கி-டாக்கியை' மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது வரும் வழியில் எங்கேயாவது தவறி விழுந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story