வீடு புகுந்து நகை திருடியவர் கைது
தேவகோட்டையில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை,
தேவகோட்டை காந்தி நகர் வி.பி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நகராட்சி கூட்டுறவு நாணய சங்க செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று மகாலிங்கமும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு ேவலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த 23 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை பயன்படுத்தி போலீசார் விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலை சேர்ந்த ஹரிஹரன்(வயது 32), திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியை சேர்ந்த மணிகண்டன் என ெதரிய வந்தது. இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் நகர் போலீசாரால் வழக்கு ஒன்றில் கைதான ஹரிஹரன் போலீசில் தேவகோட்டையில் வீடு புகுந்து மணிகண்டனுடன் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேவகோட்டை போலீசார் ஹரிஹரனை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்து அவரிடம் இருந்து 23 பவுன் நகைகளை மீட்டனர்.