வியாபாரியின் கழுத்தை பிளேடால் அறுத்தவர் கைது
திண்டிவனம் அருகே வியாபாரியின் கழுத்தை பிளேடால் அறுத்தவர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
கேரள மாநிலம் வடக்கன்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி மகன் ஜோய் (வயது 51). இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணநாயர் மகன் முரளி தரன் (50) என்பவரும் திண்டிவனம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் மதுஅருந்திக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முரளிதரன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் ஜோயின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் ஆஸ்பத்திரியில் அனுமிதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.