கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியவர் கைது


கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியவர் கைது
x

கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி கீழ ரத வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரசாந்த் (வயது 22). இவர், மதுரையில் குளிர்பான விற்பனை கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரசாந்த் டாஸ்மாக் கடையில் மதுவாங்கி கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த பள்ளத்திவிடுதி வடக்குபட்டியை சேர்ந்த காசி மகன் சுப்பிரமணி (வயது 25) உள்பட 6 பேரும் சேர்ந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுப்பிரமணியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story