தொழிலாளி கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்தவர் கைது


தொழிலாளி கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்தவர் கைது
x

தொழிலாளி கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 37). கூலித்தொழிலாளியான இவர் சேர்த்து வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஆடு வாங்குவதற்காக பொய்யூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மகேந்திரனின் மகன் பிரேம்குமார், மோகன்ராஜை மறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்தை பறித்துக்கொன்று, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மோகன்ராஜ், கீழப்பழுவூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story