முந்திரி கொட்டை மூட்டையை திருடியவர் கைது


முந்திரி கொட்டை மூட்டையை திருடியவர் கைது
x

முந்திரி கொட்டை மூட்டையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42), விவசாயி. இவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி கொட்டைகளை வீட்டில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று சுரேஷ்குமார் வெளியே சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடந்ததைகண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் பின்பக்கம் சென்று தோட்டத்தை பார்த்த போது ஒருவர் வீட்டில் இருந்த 50 கிலோ முந்திரிகொட்டை மூட்டையை எடுத்து சென்றதை கண்டு கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து உடையார்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த தர்மராஜ் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story