சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது

சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் அண்ணாமலை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கூத்தாண்டன் பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து(வயது 22) நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விசாரித்தார். அப்போது மாரிமுத்து சப்-இன்ஸ்பெக்டரை தான் மறைத்து வைத்திருந்த வாளால் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி விரைந்து சென்று மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தார். கைதான மாரிமுத்து மீது 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





