கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது


கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 12:20 AM IST (Updated: 19 Jun 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரை ஆற்றங்கரையில் சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மர்மநபர் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் பார்த்து, கூச்சலிட்டனர். உடனே மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கோவில் மேற்பார்வையாளர் அருணாச்சலம் என்ற கணேசன் (வயது 48) கங்கை கொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கங்கைகொண்டான் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் என்ற வடிவய்யா (23) என்பவர் கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வடிவேலை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story