வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்றவர் கைது


வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்றவர் கைது
x

வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள வைகைநல்லூரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 23). இவர் நேற்று முன்தினம் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கரூர் காமராஜ் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பவர், ராம்குமாரின் செல்போனை பறிக்க முயன்றார். இதுகுறித்து ராம்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story