ஆத்தூர் அருகே பால் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 12 பேர் காயம்
ஆத்தூர் அருகே பால் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே பால் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.
பால் வேன் கவிழ்ந்தது
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி கல்லுக்கட்டு, வானவரம், தவளப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் நேற்று பைத்தூர் பகுதியில் விவசாய நிலங்களில் கூலி வேலைக்கு சென்றனர். மாலை அவர்கள் வேலை முடிந்த பின்னர் ஊருக்கு செல்ல பைத்தூர் ஊராட்சி எல்லை அருகே பஸ்சுக்காக காத்து இருந்தனர்.
அப்போது ஆத்தூரில் இருந்து மலைப்பகுதியில் பால் எடுக்க சென்ற மினி வேனில் அவர்கள் ஏறி ஊருக்கு சென்றனர். இந்த வேனை கீரிப்பட்டி சேர்ந்த அஜித் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். பைத்தூர் ஊராட்சி வண்ணாந்துறை ஓடை அருகே பால் வேன் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் கவிழ்ந்தது.
12 பேர் காயம்
இந்த விபத்தில் பால் வேனில் சென்ற ராசாத்தி (70), லட்சுமி (65), கள்ளுக்கட்டு பகுதியை சேர்ந்த ரத்தினம் (30), ரேவதி (20), பழனிமுத்து (60), யசோதா (40), பழனியம்மாள் (35), ரேவதி (35), நல்லசெல்வம் (65), சினேகா உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். டிரைவர் அஜித் காயம் இன்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 12 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.