செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்


செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்
x

செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணைதலைவர் அன்புச் செல்வன், ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர் சண்முகம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story