தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும்


தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும்
x

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன.

விருதுநகர்

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன.

மாவட்ட மாநாடு

விருதுநகர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 29-வது மாவட்ட மாநாடு சூலக்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டினை குறும்பட இயக்குனர் மாதவராஜ் தொடங்கி வைத்தார்.

மாவட்ட குழு செயலாளர் ஆசிரியர் முத்துராஜ், மாவட்ட குழு செயலாளர் சமையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில குழு செயலாளர் மாரியப்பன் நிறைவுறையாற்றினார்.

அரசு பாலிடெக்னிக்கல்லூரி

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகரில் அரசு பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வேண்டும். மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களை பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு வந்திருந்தோரை முன்னாள் மாவட்ட தலைவர் சுப்புராம் வரவேற்றார். தாலுகாகுழு உறுப்பினர் கார்த்திகா நன்றி கூறினார். முன்னதாக கோரிக்கை பேரணி நடைபெற்றது. மாநாட்டு கொடியை மாவட்ட துணை தலைவர் மாலா ஏற்றி வைத்தார்.


Next Story