வாலிபரை தாக்கியவர் கைது


வாலிபரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்

-

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் மகள் விஜயசாந்தி (வயது 38). இவருடைய தம்பி விஜயகுமார் (24) என்பவர் சென்னைக்கு செல்வதற்காக விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற ஆம்ஸ்ட்ராங் (28) என்பவர் விஜயகுமாரை பார்த்து யாருடா நீ, உன்னை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே இல்லையே எனக்கேட்டு விஜயகுமாரிடம் வாக்குவாதம் செய்து அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.


Next Story