கள்ளத்துப்பாக்கி வினியோகம் செய்தவர் கைது


கள்ளத்துப்பாக்கி வினியோகம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்துப்பாக்கி வினியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 23). சம்பவத்தன்று இவர் கழனி வாசல்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றபோது அங்கு காரில் வந்த தேவகோட்டையை சேர்ந்த வைரவன்(30), திருவாடானை ராஜேஷ்(31) ஆகியோரோடு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வைரவன் துப்பாக்கியை எடுத்து தரையில் சுட்டு திருக்குமரனையும், அவரது ஆதரவாளர்களையும் மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரவனையும், ராஜேசையும் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் தேவகோட்டையில் உள்ள அவர்களது நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தி மேலும் ஒரு துப்பாக்கி, வாளை கைப்பற்றி மேலும் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களுக்கு துப்பாக்கி வினியோகம் செய்த சேட்டன் என்ற சுதர்சனம்(42) என்பவரை கன்னியாகுமரியில் பதுங்கியிருந்தபோது காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அடங்கிய தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story