கடைகளுக்கு தீ வைத்தவர் கைது


கடைகளுக்கு தீ வைத்தவர் கைது
x

சோழவந்தான் அருகே கடைகளுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பஸ் நிலையம் எதிரே ஜெயக்குமார், முருகன் உள்பட 4 பேர் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று இரவு இந்த கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விைரந்து சென்றனர். அங்கு தீப்பற்றி எரிந்த 4 கடைகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகள் மீது தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடைகளுக்கு தீ வைத்தது தொடர்பாக கல்புலிச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்கண்ணன் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story